உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் இறந்த காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி

விபத்தில் இறந்த காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி

சேலம்: சேலம் மாவட்ட ஆயுதப்படையில், இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தவர் தினேஷ். இவர் கடந்த, ஏப்ரல் மாதம் திருவண்ணாமலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இறந்த காவலருக்கு தமிழகம் முழுவதும் உள்ள, 2017 பேட்ஜை சேர்ந்த, 6,687 காவலர்கள் உதவி செய்ய முடிவு செய்தனர்.அவர்கள் தினேஷ் மகன் பெயரில் அஞ்சலகத்தில் கே.வி.பி. திட்டத்தில், 10 லட்சம் மற்றும் நிலையான வைப்பு திட்டத்தில், 8.60 லட்சம், ரொக்கமாக, இரண்டு லட்சத்து, 21 ஆயிரத்து, 110 மற்றும் சேலம் மாவட்ட ஆயுதப்படை வாகனப்பிரிவின் சார்பில், 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம், 20 லட்சத்து, 81 ஆயிரத்து, 110 ரூபாய் நிதி திரட்டினர்.இந்த தொகை, தினேஷ் குடும்பத்தினரிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சேலம் நெத்திமேட்டில் உள்ள எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. எஸ்.பி. கவுதம் கோயல் தலைமை வகித்து, காவலர் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி