| ADDED : ஆக 09, 2024 02:29 AM
சங்ககிரி: சங்ககிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கோட்ட அளவில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., லோகநாயகி தலைமை வகித்தார்.அதில் சேலம் மாவட்ட உபயோகிப்பாளர் உரிமை கழக மாவட்-டத்தலைவர் இளமுருகன் பேசுகையில், ''சங்ககிரி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ - சேவை மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். டவுன் பஞ்சாயத்து பகுதியில் உழவர் சந்தை தேவை. வி.என்.பாளையம், கழுகுமேடு செல்லும் பிரிவில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். புது பஸ் ஸ்டாண்டை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர-வேண்டும்,'' என்றார்.அதேபோல் சேலம் மண்டல நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலர் சம்பத் பேசுகையில், ''இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் இருந்து வெள்ளாண்டிவலசு பஸ் ஸ்டாப் வரை சாலை இருபுறமும் ஆக்கி-ரமிப்புகளை அகற்ற வேண்டும், இடைப்பாடி அரசு மருத்துவ-மனை முன்புறம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்,'' என்றார்.இதில், வருவாய், மின்சாரம், நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.