உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மங்களூரு - கோவை சிறப்பு ரயில் 18 முதல் சனிதோறும் இயக்கப்படும்

மங்களூரு - கோவை சிறப்பு ரயில் 18 முதல் சனிதோறும் இயக்கப்படும்

சேலம்:மங்களூருவில் இருந்து கோவைக்கு, வரும், 18 முதல், சனிதோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:பயணியர் கூட்ட நெரிசல் கருதி, மங்களூருவில் இருந்து கோவைக்கு, வரும், 18 முதல் வார சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மங்களூருவில் அன்று காலை, 9:30க்கு புறப்படும் ரயில், மாலை, 6:15க்கு கோவையை அடையும். இந்த ரயில் ஜூன், 29 வரை சனிதோறும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், 18 இரவு, 10:15க்கு புறப்படும் ரயில், ஞாயிறு காலை, 6:55க்கு மங்களூருவை அடையும். இந்த ரயில் ஜூன், 29 வரை இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பயணியர் அவதி

கோவையில் இருந்து லோக்மான்யா திலக்குக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், வழக்கமாக கோவையில் காலை, 8:50க்கு புறப்படும். ஆனால் மறுமார்க்க ரயில் தாமதத்தால் நேற்று மதியம், 12:00 மணிக்கு புறப்பட்டது. இதனால் அந்த ரயிலுக்கு முன்பதிவு செய்திருந்த பயணியர், முன்பதிவு செய்யாமல் பொது பெட்டியில் பயணிக்க திட்டமிட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி ஸ்டேஷன்களில் காத்திருந்து சிரமத்துக்கு ஆளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை