உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீர்வரத்து 2 நாட்களாக இறங்குமுகம்

மேட்டூர் அணை நீர்வரத்து 2 நாட்களாக இறங்குமுகம்


Deprecated: mb_convert_encoding(): Handling HTML entities via mbstring is deprecated; use htmlspecialchars, htmlentities, or mb_encode_numericentity/mb_decode_numericentity instead in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 350

மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்வரத்து அதிகரித்தது. அதற்கேற்ப நேற்று கபினியில் இருந்து வினாடிக்கு, 5,000 கன அடி, கே.ஆர்.எஸ்.,ல், 500 கனஅடி என, 5,500 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. கடந்த, 9ல் வினாடிக்கு, 3,341 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, 10ல், 4,521 கன அடியாக அதிகரித்தது. ஆனால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 4,197 கன அடி, நேற்று, 3,087 கன அடியாக சரிந்தது. கால்வாய் பாசன நீர் திறப்புகர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணையின் மொத்த நீர்மட்டம், 124.8 அடி. கொள்ளளவு, 49.5 டி.எம்.சி., தென்மேற்கு பருவமழை தீவிரம் குறைந்ததால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 5,600 கனஅடியாக இருந்த கே.ஆர்.எஸ்., நீர்வரத்து நேற்று, 4,000 கனஅடியாக சரிந்தது. அணை நீர்மட்டம், 104.5 அடி, நீர் இருப்பு, 26.5 டி.எம்.சி.,யாக இருந்தது. கே.ஆர்.எஸ்., அணை பாசன பகுதிகள், மாண்டியா, மைசூரு மாவட்டங்களில் உள்ளன. முதல் கட்டமாக அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு, 2 நாட்களாக வினாடிக்கு, 1,500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. காவிரியில் வினாடிக்கு, 500 கனஅடி நீர், கபினியில் வினாடிக்கு, 5,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை