உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மினி சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து வியாபாரி பலி; 2 பேர் படுகாயம்

மினி சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து வியாபாரி பலி; 2 பேர் படுகாயம்

ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் கடந்த, 25ல், பங்குனி உத்திர தேர் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு சப்தாவரணம் நடந்தது. இதையொட்டி கோவில் அடிவாரம், மலை பகுதியில் உள்ளூர், வெளியூரை சேர்ந்தவர்கள், பொம்மை, தின்பண்டம், வீட்டு உபயோக பொருட்களை விற்கும் தற்காலிக கடை அமைத்திருந்தனர். திருவிழா முடிந்து நள்ளிரவு, 1:30 மணிக்கு, மலை பகுதியில் பொரி, தின்பண்டம் கடை வைத்திருந்த, ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் ஆத்துாரை சேர்ந்தவர்கள், மினி சரக்கு வேனில் பொருட்களை ஏற்றிக்கொண்டு, 13 பேர் வந்தனர். வேனை, ஆத்துாரை சேர்ந்த டிரைவர் அய்யனார், 52, ஓட்டினார்.மலைப்பாதையின் கொண்டை ஊசி வளைவில் சாலை வளைவில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்தது. அதில் வந்த, 13 பேரையும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் ஈரோடு மாவட்டம் பவானி பழனியப்பன், 50, உயிரிழந்தார். தொடர்ந்து பவானி வேம்பி, 65, ஆத்துார் சிலம்பரசன், 17, மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ