உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகராட்சி நிர்வாக மண்டல அலுவலகம் முற்றுகை

நகராட்சி நிர்வாக மண்டல அலுவலகம் முற்றுகை

சேலம்: சேலம், சத்திரத்தில் உள்ள நகராட்சிகளின் நிர்வாக மண்டல அலுவலகத்தை, நரசிங்கபுரம் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் பலர், நேற்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து குறைந்தபட்ச ஊதியம், 628 ரூபாய் வழங்குதல்; அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணம், சீருடை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: நரசிங்கபுரம் நகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில், 18 ஆண்டுகளாக பணிபுரிகிறோம். முறையாக ஊதியம் வழங்காமல் உபகரணம் வழங்காமல் நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து, முற்றுகையில் ஈடுபட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையடுத்து அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானப்படுத்தியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை