உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாசனத்துக்கு நீர் திறப்பது முதல்வர் முடிவு மண்டல தலைமை பொறியாளர் தகவல்

பாசனத்துக்கு நீர் திறப்பது முதல்வர் முடிவு மண்டல தலைமை பொறியாளர் தகவல்

மேட்டூர்:''டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பது தொடர்பாக, தமிழக முதல்வர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் முடிவு செய்வர்,'' என, திருச்சி மண்டல தலைமை பொறியாளர் (பொ) தயாளன்குமார் கூறினார்.சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில், 4 அடி உயர்ந்த நிலையில், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் (பொ) தயாளன்குமார் அணையில் ஆய்வு மேற்கொண்டார். அணை இடது, வலதுகரை, உபரி நீர் வெளியேற்றும் 16 கண் மதகு, கவர்னர் வியூ பாயின்ட், பூங்கா ஆகியவற்றை பார்வையிட்ட அவர், அணை நீர் இருப்பு, வரத்து குறித்த விபரங்களை பொறியாளர்களிடம் கேட்டறிந்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''மேட்டூர் அணை நீர்மட்டம், 90 அடிக்கு மேல் உயர்ந்தால் மட்டுமே, பாசனத்துக்கு நீர் திறக்க முடியும். எனினும், நீர் திறப்பு குறித்து தமிழக முதல்வர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் முடிவு செய்வர். அதன்படி அணையில் நீர்திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.ஆய்வின் போது அணை செயற்பொறியாளர் சிவகுமார், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை