| ADDED : மார் 22, 2024 01:44 AM
சேலம்;சேலம் லோக்சபாவில், 100 சதவீத ஓட்டுப்பதிவு நடக்க, வாக்காளர் பட்டியலில், 85 வயதுக்கு மேற்பட்டோர், இயக்க குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போடாத நிலையில் அவர்கள் வீட்டில் இருந்தபடி ஓட்டுப்போட வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், '12டி' படிவத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் வீடு தேடி சென்று விண்ணப்பம் வழங்கி பூர்த்தி செய்து, திரும்ப பெறப்பட்டு, அது தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. கிச்சிப்பாளையத்தில் நேற்று நடந்த பணியை, தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார். தகுதியானவர்கள் வரும், 24 வரை இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.