உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

சேலம்:முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள், சேலம், நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, அக்கட்சியில் இணைத்துக்கொண்டனர். தஞ்சாவூர் மாநகர் செயலர் சரவணன் ஏற்பாட்டில், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய முன்னாள் செயலர் துரை வீரணன், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலர் விக்டர் லுார்துராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் அருண் உள்ளிட்டோர் தலைமையில், 100க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் காமராஜ், தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலர் சேகர், மேற்கு மாவட்ட செயலர் ரெத்தினசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை