உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பணி முடிந்த இடத்தில் சீரமைக்காததால் பள்ளத்தில் பஸ் சிக்கி பயணியர் அலறல்

பணி முடிந்த இடத்தில் சீரமைக்காததால் பள்ளத்தில் பஸ் சிக்கி பயணியர் அலறல்

சேலம் : சேலம், சிவதாபுரம் அருகே சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி, சித்தர்கோவில் பிரதான சாலையில் தண்ணீர் ஓட, மக்கள், வியாபாரிகள் அவதிக்கு ஆளாகினர். இதற்கு தீர்வு காண, மழைநீர் வடிகால் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. அங்கு பணி நிறைவடைந்த பகுதிகளில் சாலை சீரமைக்கப்படாமல் மணலால் மூடப்பட்டிருந்தது.அதில் சிவதாபுரம் பஸ் ஸ்டாப் அருகே முறையாக மூடப்படாத பள்ளத்தில், நேற்று காலை, 10:50 மணிக்கு இளம்பிள்ளையில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பஸ் சிக்கியது. பஸ் சாய்ந்ததால், பயணியர் அலறினர். பின் பயணியர் அனைவரும் இறக்கப்பட்டு, கிரேன் மூலம் பஸ் மீட்கப்பட்டது. இச்சம்பவத்தால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏற்கனவே, மழைநீர் வடிகால் கட்டுமானப்பணியால், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகி வரும் நிலையில், பணி முடிந்த இடங்களில் பள்ளத்தை மூடாதது மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதனால் வடிகால் பணியை விரைவாக முடித்து, அனைத்து இடங்களிலும் சீரமைப்பு பணியையும் மேற்கொள்ள, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை