உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெரியார் பல்கலை விவகாரம் 2 தரப்பு கருத்து கேட்புக்கு அழைப்பு

பெரியார் பல்கலை விவகாரம் 2 தரப்பு கருத்து கேட்புக்கு அழைப்பு

ஓமலுார்: பெரியார் பல்கலை நிர்வாகம், தொழிலாளர் சங்க நிர்வாகிகள் இடையேயான விவகாரத்தில், கருத்து கேட்பு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சேலம் பெரியார் பல்கலையில், 10 முதல், 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி, சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில், பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக ஊழியர்களுடன் தொடர் போராட்டங்களை முன்னெடுத்ததாக, சங்க நிர்வாகிகளான, தலைவர் கனிவண்ணன், பொதுச்செயலர் சக்திவேல், அமைப்பு செயலர் கிருஷ்ணவேணி, துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோரை, முதலில் சஸ்பெண்ட், பின், 'டிஸ்மிஸ்' செய்து, பல்கலை நிர்வாகம் உத்தரவிட்டது.பணி நிரந்தர வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த ஆணைய முன் அனுமதியின்றி வழக்கில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இயலாது எனக்கூறி பாதிக்கப்பட்ட, 4 பேரும், பல்கலை நிர்வாகிகளான ஜெகநாதன், பாலகுருநாதன் மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி கேட்டு தொழிலாளர் நல கமிஷனரிடம் முறையிட்டனர். அதை விசாரித்த, சேலம் தொழிலாளர் நல உதவி கமிஷனர், இரு தரப்பு வாதங்களை கேட்டு அதன் அறிக்கையை, சென்னை தொழிலாளர் நல கமிஷனருக்கு அனுப்பினார்.இந்நிலையில் இருதரப்பு கருத்தை அறிய, பல்கலை நிர்வாகிகள் ஜெகநாதன், பாலகுருநாதன், சங்க செயலர் சக்தி வேலுக்கு, தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலர் குமார் ஜெயந்த், கருத்துக்கேட்பு அழைப்பாணையை, கடந்த, 21ல் அனுப்பி உள்ளார். அதன்படி இருதரப்பும் ஜூலை, 16ல் தலைமை செயலகத்தில் ஆஜராகி கருத்து தெரிவிக்க வேண்டும். தவறினால் கடிதம் மூலம் வழங்கலாம் என, அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை