உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பகவான் நாமத்தை கூறினாலே பலன் கண்டிப்பாக கிடைக்கும்

பகவான் நாமத்தை கூறினாலே பலன் கண்டிப்பாக கிடைக்கும்

சேலம்: ''பகவான் நாமத்தை கூறினாலே போதும். அதன் பலன் கண்டிப்பாக கிடைக்கும்,'' என, மஹாரண்யம் முரளீதர ஸ்வாமிஜியின் சீடர் முரளி ஜி பேசினார்.சேலம் நாமத்துவார் பிரார்த்தனை மையம் சார்பில், அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில், 'ஆழ்வார்களும் பகவன் நாம வைபவமும்' தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த, 22ல் தொடங்கியது. வரும், 28 வரை நடக்கும் நிகழ்ச்சியில் நேற்று, மஹாரண்யம் முரளீதர ஸ்வாமிஜியின் சீடர் முரளி ஜி பேசியதாவது: திருப்பாணாழ்வார், 'அமுதத்தை போன்ற ஸ்ரீரங்கநாதரின் அழகை கண்ட பின், புற உலகை காண விரும்பவில்லை' எனக்கூறி ஸ்ரீரங்க கர்ப்ப கிரகத்தில் சென்று மறைந்தார். கடவுள் தனக்குள் அவரை ஏற்றுக்கொள்ளும்படி மற்ற ஆழ்வார்களை விடவும், அவர் அப்படி என்ன சிறப்பு பெற்றார் தெரியுமா?தியானமோ, யோகமோ, வேறு எல்லாமோ செய்யவில்லை. ராமா, கிருஷ்ணா என பகவான் நாமத்தை மனமார கூறினார். அதுபோல் மனமார நம்மால் கூற முடியவில்லையே என, நீங்கள் வருத்தப்படலாம். வேறு ஏதாவது குறித்து யோசித்துக்கொண்டே கடவுள் நாமத்தை கூறினால், அதற்கு பயன் உண்டா என்ற கேள்வியும் எழலாம். நெருப்பினை தெரிந்து தொட்டாலோ, தெரியாமல் தொட்டாலோ சுடுவதில் எந்த மாற்றமும் இருக்காது. அதுபோல் பகவான் நாமத்தை கூறினாலே போதும். அதன் பலன் கண்டிப்பாக கிடைக்கும். கலியுகத்தில் அது மட்டுமே நம்மை கரையேற்றும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, டி.வி.என்., திருமண மண்டபம் எதிரே நடந்த, ஹரே ராம மஹா மந்திர அகண்ட நாம ஜெபத்தில் திரளானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை