உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓட்டு எண்ணும் மையத்தில் தடுப்பு அகற்றம்

ஓட்டு எண்ணும் மையத்தில் தடுப்பு அகற்றம்

ஓமலுார்;கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில், சேலம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்பட்டது. தற்போது ஓட்டு எண்ணிக்கை முடிந்து, அங்கிருந்த மின்னணு ஓட்டு இயந்திரங்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் கொண்டு செல்லப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்புக்கு அமைக்கப்பட்ட இரும்பு, மூங்கில் தடுப்புகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. வரும், 10 முதல், மாணவர்களுக்கு வகுப்பு தொடங்க உள்ளதால், தடுப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி