உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒழுகும் வீடுகளை சீரமைக்க கலெக்டரிடம் கோரிக்கை

ஒழுகும் வீடுகளை சீரமைக்க கலெக்டரிடம் கோரிக்கை

வீரபாண்டி: வீரபாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட, 25 ஊராட்சிகளில், கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகள் பட்டியலை வைத்து ஒப்புதல் பெற சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நேற்று நடத்தப்பட்டன. வீரபாண்டி ஊராட்சி தோப்புக்காட்டில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் பிருந்தாதேவி பங்கேற்றார். அதில் ஊராட்சி செயலர் ஆறுமுகம், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில், 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்ட தேர்வு செய்யப்பட்ட இரு பயனாளிகளின் பெயர்கள், விரிசல் விழுந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க, பராமரிக்க தேர்வு செய்யப்பட்ட, 13 பயனாளிகள் பெயர் பட்டியலை வாசித்தார்.அப்போது அங்கிருந்த பெண்கள் பலர், அவர்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகளில் விரிசல் ஏற்பட்டு மழைநீர் ஒழுகுவதால் சீரமைத்து தர வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளித்தனர். அதற்கு கலெக்டர், 'நடப்பாண்டு ஒதுக்கீட்டில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வீடுகளை சரி செய்து தரப்படும். மீதி வீடுகள் அடுத்தாண்டு ஒதுக்கீட்டில் சீரமைக்கப்படும்' என கூறினார். இதில் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை