உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக்கை விற்க முயற்சி எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

பைக்கை விற்க முயற்சி எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

சேலம்: சேலம் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு, சூரமங்கலத்தில் செயல்படுகிறது. அதன் வளாகத்தில், விபத்தில் சிக்கிய வாக-னங்கள் நிறுத்தப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் அங்கு நிறுத்-தப்பட்டிருந்த இரு பைக்குளை, ஒரு டிரைவர் சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தார். அவரிடம், சூரமங்கலம் போலீசார் விசா-ரித்தபோது, எஸ்.எஸ்.ஐ., சரஸ்வதி, ஏற்றச்சொன்னதாக தெரி-வித்தார். தொடர்ந்து விசாரித்ததில், சரஸ்வதி ஏற்றச்சொன்னதும், அவர் விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை ஆயுதப்படைக்கு மாற்றி, மாநகர கமிஷனர் நடவடிக்கை எடுத்தி-ருந்தார். இந்நிலையில் அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நேற்று உத்தர-விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை