உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓடை ஆக்கிரமிப்பு வருவாய்த்துறை மீட்பு

ஓடை ஆக்கிரமிப்பு வருவாய்த்துறை மீட்பு

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே கொண்டையம்பள்ளியில் உள்ள ஓடையை ஆக்கிரமித்து பாதை அமைப்பதாக, தாசில்தார் பாலகிருஷ்ணனுக்கு புகார் சென்றது. இதையடுத்து ஆர்.ஐ., முனிராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். விசாரணையில் தகரபுதுார் ஊராட்சி தலைவர் சுசீலாவின் கணவர் கோவிந்தராஜ், பொக்லைன் உதவியுடன், ஓடையில் பாதை அமைத்தது தெரிந்தது. பின் அந்த பாதையை அகற்றி பழைய நிலைக்கு மாற்றம் செய்தனர். இதுகுறித்து வி.ஏ.ஓ., சரிதா புகார்படி, தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை