மேலும் செய்திகள்
ஈடி மத்திய அரசு தவறாக பயன்படுத்தவில்லை!
12-Aug-2024
சேலம்: நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும், 7ல் கொண்டாடப்-பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க, மத்திய மாசு கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலையை மட்டும் பயன்படுத்துவதோடு சிலை, பந்தலை அலங்கரிக்க உகந்த பொருட்களையே உபயோ-கிக்க வேண்டும்.சிலைகள் மீது பூசப்படும் வண்ணம், அலங்காரத்துக்கு இயற்கை-யாக மட்கக்கூடிய, நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்கள், உகந்த பூக்கள், இலைகள், மீண்டும் உபயோகிக்கக்கூடிய அலங்-கார துணிகளை பயன்படுத்த வேண்டும். பிரசாத வினியோகத்-துக்கு மட்கும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள், பாத்திரங்-களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகளை கரைக்க வேண்டும். எல்.இ.டி., பல்பு உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த விளக்குகள், அலங்கார பொருட்களை பயன்படுத்தி அதை துாக்கி வீசாமல் முடிந்த அளவு சேமித்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.பயன்படுத்த கூடாதவை'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' சிலைகளை அறவே பயன்படுத்தக்கூ-டாது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒருமுறை உபயோ-கித்து துாக்கி வீசப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல், ரசாயன பொருட்கள், சாயங்களை பயன்படுத்தக்கூடாது. அதேபோல் பூஜை, அலங்கார பொருட்களுக்கும் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டாம்.நச்சுத்தன்மையுள்ள, மட்கும் தன்மையற்ற ரசாயன சாயங்களை பயன்படுத்த கூடாது. பண்டிகையின்போது ஒருமுறை பயன்ப-டுத்தி துாக்கி வீசப்படும் பிளாஸ்டிக் தட்டு, கோப்பை, உறிஞ்சு குழல்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குப்பை, கழிவை பொறுப்பற்று கொட்ட வேண்டாம். அனுமதியற்ற நீர்நி-லைகளில் சிலைகளை கரைக்க கூடாது. 'பிலமென்ட் பல்பு'-களை, அலங்கார விளக்குகளாக பயன்படுத்த வேண்டாம் என, சேலம் சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் அறிவுறுத்தி-யுள்ளார்.
12-Aug-2024