உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உழவர் சந்தையில் தக்காளி விலை குறைந்தது

உழவர் சந்தையில் தக்காளி விலை குறைந்தது

சேலம்: சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், ஆத்துார் உள்பட, 13 உழவர் சந்தைகள், பால் மார்க்கெட், ஆற்றோர சந்தை உள்பட பல்வேறு இடங்களில் மார்க்கெட்டுகள் செயல்படுகின்றன. அங்கு மேச்-சேரி, சின்னதிருப்பதி, கருமந்துறை உள்பட பல்வேறு இடங்-களில் இருந்து தக்காளி கொண்டு வரப்படுகிறது. தற்போது வரத்து அதிகரித்து அதன் விலை குறைந்துள்ளது. இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறியதாவது: ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை குறைந்துள்ளது. கடந்த, 30ல் உழவர் சந்தையில் முதல் ரகம் கிலோ, 35, இரண்டாம் ரகம், 30 ரூபாய், சில்லரை விற்-பனை கடைகளில் முதல் ரகம், 40, இரண்டாம் ரகம், 35 ரூபாய்க்கு விற்றது. தற்போது முதல் ரகம் சந்தையில், 26, இரண்டாம் ரகம், 20, கடைகளில் முதல் ரகம், 30, இரண்டாம் ரகம், 25 ரூபாயாக சரிந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ