உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தக்காளி, பச்சை மிளகாய் கிலோவுக்கு ரூ.20 சரிவு

தக்காளி, பச்சை மிளகாய் கிலோவுக்கு ரூ.20 சரிவு

வாழப்பாடி, சேலம் மாவட்டம் வாழப்பாடி, கருமந்துறை, சந்துமலை, காரிப்பட்டி, ஏத்தாப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் தக்காளியை, வாழப்பாடியில் உள்ள உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்கின்றனர். அங்கு இரு வாரங்களுக்கு முன் பெய்த கோடை மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் அதன் விலை கிலோ, 75 ரூபாய்க்கு விற்றது. கடந்த, 25ல், கிலோ, 60 ரூபாயாக சரிந்தது. நேற்று மேலும், 20 ரூபாய் சரிந்து ஒரு கிலோ தக்காளி, 40 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது விளைச்சல் அதிகரித்ததால், விலை குறைந்து வருவதாக, விவசாயிகள் தெரிவித்தனர். அதேபோல் ஒரு வாரத்துக்கு முன் கிலோ, 70க்கு விற்ற பச்சை மிளகாய், 20 ரூபாய் குறைந்து, நேற்று, 50 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை