உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மிரட்டல் விடுத்தோரை கண்டித்து திருநங்கையர் சாலை மறியல்

மிரட்டல் விடுத்தோரை கண்டித்து திருநங்கையர் சாலை மறியல்

மிரட்டல் விடுத்தோரை கண்டித்துதிருநங்கையர் சாலை மறியல்சேலம், ஆக. 21-கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சோழதரத்தை சேர்ந்த, 19 வயது ஆண், பிளஸ் 1 வரை படித்துள்ளார். அவர் ஒன்றரை மாதங்களுக்கு முன் திருநங்கையாக மாறி சேலம் திருநங்கையரிடம் தஞ்சம் புகுந்தார். தொடர்ந்து செவ்வாய்ப்பேட்டை, நரசிம்மன் செட்டி சாலையில் சக திருநங்கையருடன் வசிக்கிறார்.அவரது பெற்றோர், நேற்று முன்தினம் சேலத்தில் அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து, வீட்டுக்கு வந்துவிடும்படி கேட்டனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திருநங்கையருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.இதை கண்டித்து நேற்று காலை, 10:30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன் திருநங்கையர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் டவுன் போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர். இதனால் கலைந்த திருநங்கையர், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனு மேல் நடவடிக்கைக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை