உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டிரைவரை தாக்கி ரூ.24 லட்சம் வழிப்பறி 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

டிரைவரை தாக்கி ரூ.24 லட்சம் வழிப்பறி 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

சேலம்:வேன் டிரைவரை தாக்கி 24 லட்சம் ரூபாய் பறித்துச்சென்ற புரோக்கர் உள்பட 3 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் பாலக்காடு மன்னார்காடு வடகோட்டத்துறையை சேர்ந்த மிளகு வியாபாரி முகமது அலி. இவரிடம் வேன் டிரைவராக அதே பகுதியை சேர்ந்த வீராசாமி 33 பணிபுரிந்தார். இவர் 2015 ஜூன் 11ல் 24.40 லட்சம் ரூபாயுடன் மிளகு வாங்க ஏற்காடு செம்மநத்தத்தை சேர்ந்த மிளகு நில புரோக்கர் சண்முகத்தை அழைத்துக்கொண்டு கொல்லிமலைக்கு வேனில் புறப்பட்டார்.சேலம் பனமரத்துப்பட்டி ஏரிக்கரை அருகே சிறுநீர் கழிக்க சண்முகம் இறங்கினார். ஆனால் திரும்ப வரவில்லை. இந்நிலையில் ஆம்னி வேன் பைக்குகளில் வந்த கும்பல் வீராசாமியை மிரட்டி கட்டையால் தாக்கி அவரிடம் இருந்த 24.40 லட்சம் ரூபாயை பறித்து சென்றது.பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து புரோக்கர் சண்முகம் 42, அவரது கூட்டாளிகளான தாசநாயக்கன்பட்டி பாஸ்கரன் 32 கார்த்திக் 30 உள்பட 10 பேரை கைது செய்தனர்.இந்த வழக்கு சேலம் மாவட்ட இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் பாஸ்கரன் கார்த்திக் சண்முகம் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை 5000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ரவி நேற்று உத்தரவிட்டார். மற்றவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை