உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 11 சார் - பதிவாளர் இடமாற்றம்

11 சார் - பதிவாளர் இடமாற்றம்

சேலம்:சேலம் மண்டல கூட்டுறவுத்துறையில், 2 ஆண்டுக்கு மேல் பணி நிறைவு செய்த சார்பதிவாளர், 11 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார் பிறப்பித்துள்ளார்.அதன்படி யுவராணி, நாச்சியப்பா கூட்டுறவு மேலாண் நிலையத்துக்கும், விக்னேஷ்குமார், சேலம் சரக துணைப்பதிவாளர் அலுவலகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல் தேவக்குமார், மாவட்ட கூட்டுறவு அச்சகம்; சுமதி, வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம், சேலம்; பூபதி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியம்; பிரியதர்ஷினி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி; கார்த்திகேயன், கள அலுவலர், ஆத்துார்; ஜெ.பூ.கார்த்திகேயன், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம், ஆத்துார்; ஜோதிமணி, ஆத்துார் நகர கூட்டுறவு சங்கம்; புனிதா, பொ.வி.திட்டம், காடையாம்பட்டி; கவுராஜ், மேச்சேரி கள அலுவலராக மாற்றப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி