மேலும் செய்திகள்
புகையிலை பறிமுதல் 2 பேருக்கு 'காப்பு'
15-Oct-2025
ஓமலுார், சேலம் மாவட்டம் ஓமலுார், புளியம்பட்டியில், சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு, சிறப்பு பிரிவு போலீசார், வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அதிவேகமாக வந்த வோல்ஸ்வேகன், சியாஸ் ஆகிய இரு கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இரு கார்களிலும், 195 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அதன் மதிப்பு, 1.85 லட்சம் ரூபாய். கார்களை ஓட்டி வந்தவர்களிடம் விசாரித்தபோது, கேரள மாநிலம் கண்ணுாரை சேர்ந்த அப்துல் சமது, 42, கர்நாடகா மாநிலம் வடக்கு பெங்களூரு சஜீர், 41, என்பதும், பெங்களூருவில் இருந்து, கேரளத்துக்கு புகையிலை பொருட்களை கடத்த முயன்றதும் தெரிந்தது.இதனால் காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, ஓமலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
15-Oct-2025