உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 10ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடுக்கு 2 மையங்கள்

10ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடுக்கு 2 மையங்கள்

சேலம் : தமிழகத்தில் மார்ச், 15 முதல், ஏப்., 8 வரை, 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வுகள் நடந்தன. சேலம் மாவட்டத்தில், 43,270 பேர் பங்கேற்றனர். கல்வி மாவட்டத்துக்கு, 1 வீதம் மதிப்பீட்டு மையங்கள் அமைக்கப்பட்டு விடைத்தாள்கள் ரேண்டம் அடிப்படையில் பல்வேறு மாவட்ட மதிப்பீட்டு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.அதன்படி சேலம் கல்வி மாவட்டத்தில் மாசிநாயக்கன்பட்டி சுவாமி மெட்ரிக் பள்ளியிலும், தாரமங்கலம் கல்வி மாவட்டத்தில் ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.இன்று முதல், முதன்மை தேர்வர்கள், கூர்ந்தாய்வாளர்கள், முதல்கட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர். ஏப்., 15 முதல், உதவித்தேர்வர்கள், மதிப்பீடு செய்யும் பணி நடக்க உள்ளது. தேர்தலின்போது இடையில் இரு நாட்கள் பணி நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடர உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை