உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாய் கடித்து 2 ஆடுகள் பலி

நாய் கடித்து 2 ஆடுகள் பலி

சேலம்:சேலம், 9வது வார்டு, முத்து கவுண்டர் தெருவை சேர்ந்தவர் லட்சுமி, 73. இவர், வீட்டுக்கு பின்புறம், 7 ஆடுகளை வளர்க்கிறார். நேற்று முன்தினம், பட்டியில் அடைத்திருந்தார். நேற்று காலை பார்த்தபோது, இரு ஆடுகள் குடல் சரிந்தபடி இறந்து கிடந்தன. மற்ற ஆடுகள் படுகாயம் அடைந்திருந்தன. உடனே கால்நடை துறைக்கு தகவல் தெரிவித்த பின், அதன் மருத்துவர்கள் வந்து, படுகாயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். நள்ளிரவில் கூட்டமாக வந்த தெருநாய்கள் கடித்து ஆடுகள் பாதிக்கப்பட்டது தெரிந்தது.இதுபற்றி லட்சுமி கூறுகையில், ''மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நான், ஆடு வளர்ப்பு மூலம் தான் ஜீவனம் நடத்தி வருகிறேன்,'' என்றார். ஏற்கனவே தாதம்பட்டியில், 5 ஆடுகளை, தெருநாய்கள் கடித்து குதறியிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி