| ADDED : ஆக 19, 2024 06:17 AM
சேலம்: சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில் கருணாநிதி நுாற்-றாண்டு விழா பேச்சுப்போட்டி, அழகாபுரத்தில் நேற்று நடந்தது. எம்.பி., செல்வணபதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாவட்ட செயலர் சிவ-லிங்கம் தலைமை வகித்தனர்.இதில் மாவட்டத்தில் உள்ள, 30க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து, 200 மாணவியர் உள்பட, 400 பேர் பங்கேற்றனர். அவர்கள், கருணாநிதியின் மாநில சுயாட்சி, சமூக நீதி, சமத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் பேசினர்.அதில் சிறப்பாக பேசியவர்களை, எம்.எல்.ஏ., பரந்தாமன், பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், மதி-மாறன், மதிவதனி உள்பட, 15 பேர் தேர்ந்தெடுத்-தனர். அவர்களுக்கு சான்தறிழ், கேடயங்கள் வழங்கப்பட்டன.வெற்றி பெற்றவர்கள் மண்டல போட்டி, தொடர்ந்து மாநில போட்டிகளில் பங்கேற்க உள்-ளனர். இதில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகர செயலர் ரகுபதி உள்பட பலர் பங்கேற்-றனர்.