அரசு ஊழியரின் மனைவி உள்பட 5 பேர் மாயம்
சேலம், சேலம், கருப்பூர் அடுத்த தேக்கம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 45. இவர், சேலம், காந்தி சாலை பொதுப்பணி (மின்னியல்) செயற்பொறியாளர் அலுவலகத்தில் முதுநிலை உதவியாளராக உள்ளார். அவரது மனைவி சோபனபிரியா, 33. இவர் கடந்த, 25 மதியம், 12:00 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் காணாததால், மறுநாள் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகார்படி, கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.கணவருடன் கருத்து வேறுபாடு உண்டாகி, ஒரு மாதத்துக்கு முன் சோபனபிரியா விஷம் அருந்தி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது காணாமல் போனது தெரியவந்துள்ளது.அதேபோல் அஸ்தம்பட்டி, ஜான்சன்பேட்டை, கண்ணன்காட்டை சேர்ந்த, சென்ட்ரிங் தொழிலாளி கார்த்திகேயன், 38. வெளியூரில் தங்கி மாதக்கணக்கில் வேலை செய்வதை வழக்கமாக கொண்ட இவர், 3 மாதத்துக்கு முன் வெளியூர் சென்ற நிலையில் திரும்பவில்லை. அவரது மனைவி சுகன்யா புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.3 மாணவியர்தேக்கம்பட்டியை சேர்ந்தவர் பிரிஷா, 19. ஓமலுாரில் உள்ள தனியார் செவிலியர் கல்லுாரியில் சேர்ந்து நின்று விட்டார். கடந்த, 25 மதியம், 1:00 மணிக்கு வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. அவரது தந்தை செல்வம் புகார்படி, கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.இரும்பாலை, திருப்பதி நகரை சேர்ந்தவர் தனுஷ்யா, 19. தனியார் செவிலியர் கல்லுாரியில் முதலாண்டு படிக்கிறார். கடந்த, 26ல் கல்லுாரி சென்ற அவர், வீடு திரும்பவில்லை. அவரது தாய் ரஞ்சனி புகார்படி, இரும்பாலை போலீசார் தேடுகின்றனர்.கன்னங்குறிச்சி, செட்டிச்சாவடி, அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் திவ்யா, 19. அரசு கல்லுாரியில் படிக்கிறார். கடந்த, 26ல் கல்லுாரி சென்ற அவர் வீடு திரும்பாததால், அவரது தாய் மலர்கொடி புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் தேடுகின்றனர்.