உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீட்டில் துாங்கிய பெண்ணை எழுப்பி 7 சவரன் கொள்ளை

வீட்டில் துாங்கிய பெண்ணை எழுப்பி 7 சவரன் கொள்ளை

தலைவாசல்:சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே நத்தக்கரையை சேர்ந்த காவலன் மனைவி அமராவதி, 55. கணவர் இறந்த நிலையில், மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு, சேலம் -- சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வீட்டில் தனியே வசிக்கிறார்.நேற்று முன்தினம், அவர் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை, 1:00 மணிக்கு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அமராவதி கதவை திறந்ததும், வெளியே நின்றிருந்த நான்கு பேர் கும்பல், கத்தியை காட்டி மிரட்டி, அமராவதி முகத்தை துணியால் மூடி, அவர் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்தவை என, 7 சவரன் நகைகள், 25,000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை