உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தர்மபுரியில் இருந்து வழி தவறி வந்த சிறுவன் ஓமலுாரில் மீட்பு

தர்மபுரியில் இருந்து வழி தவறி வந்த சிறுவன் ஓமலுாரில் மீட்பு

ஓமலுார் : தர்மபுரியில் இருந்து வழி தவறி, சேலம் பஸ்சில் வந்த, 5 வயது சிறுவனை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.கோவை கணேசபுரத்தை சேர்ந்த ஆனந்தபாபு, 40, தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் நேற்று காலை, குடும்பத்துடன் தர்மபுரி பென்னாகரத்தில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு காரில் வந்துள்ளார். தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்த போது, இவரது மகன் பிரித்திவி, 5, காரிலிருந்து இறங்கியது அவர்களுக்கு தெரியவில்லை.சிறிது நேரத்தில் மகனை காணவில்லை என தேடியுள்ளனர். தர்மபுரி போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது, சிறுவன் சேலம் செல்லக்கூடிய தனியார் பஸ்சில் ஏறியதை கண்டுபிடித்தனர். அங்கிருந்து சேலம் எஸ்.பி.,அலுவலகத்துக்கு தர்மபுரி போலீசார், சிறுவனை குறித்த தகவல் கொடுத்தனர்.மதியம், 1:15 மணிக்கு ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் வந்த அந்த பஸ்சில் இருந்த சிறுவனை, ஓமலுார் போலீசார் மீட்டு, மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். பின் அங்கு வந்த தர்மபுரி போலீசாரிடம் சிறுவனை ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை