உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயிலில் இருந்து தவறி விழுந்த ஐயப்ப பக்தர்; துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய எஸ்.ஐ.,

ரயிலில் இருந்து தவறி விழுந்த ஐயப்ப பக்தர்; துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய எஸ்.ஐ.,

சேலம்: ரயில் புறப்பட்ட நிலையில் ஏற முயன்று தடுமாறி விழுந்த ஐயப்ப பக்தரை, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ்.ஐ., காப்பாற்றினார்.சென்னை, தேனாம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயமணி, 71. சபரிமலைக்கு மாலை போட்டிருந்த அவர், கடந்த, 1ல் சென்னையில் இருந்து எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சபரிமலைக்கு பயணித்தார். சேலம் வந்த ரயில், நடைமேடை, 4ல் நின்றது. ஜெயமணி இறங்கி, குடிநீர் பாட்டில் வாங்கி வருவதற்குள் ரயில் புறப்பட்டது.அதிர்ச்சியடைந்த ஜெயமணி, வேகமாக ஓடி ரயிலில் ஏற முயன்றார். அப்போது நிலைதடுமாறி, படிக்கட்டில் இருந்து விழுந்தார். ரயில், நடைமேடை நடுவே விழ முயன்றபோது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ., பழனி துரிதமாக செயல்பட்டு, ஐயப்ப பக்தரின் கையை பிடித்து இழுத்து நடைமேடையில் போட்டு, அவரது உயிரை காப்பாற்றினார். லேசான காயம் அடைந்த ஜெயமணிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அடுத்த ரயிலில் அவரை ஏற்றி சபரிமலைக்கு அனுப்பினர்.பின் ரயிலில் சென்றுகொண்டிந்த ஜெயமணி, அவரது மொபைல் போன் மூலம், வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், 'ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தபோது உயிரை காப்பாற்றிய எஸ்.ஐ., பழனிக்கு நன்றி. அவருக்கு ஐயப்பன் அருள்புரிவார்' என பதிவிட்டார். அந்த வீடியோ, பரவி வருகிறது. இதை பார்த்த போலீஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள், எஸ்.ஐ., பழனியை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை