உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.1.53 கோடி பற்றாக்குறை

ரூ.1.53 கோடி பற்றாக்குறை

பட்ஜெட்டை தாக்கல் செய்து மேயர் ராமச்சந்திரன் பேசியதாவது:சேலம் மாநகராட்சிக்கு, 2024 - 25 நிதியாண்டில், 901.855 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 903.385 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், 1.53 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ள போதும், வளர்ச்சி திட்டங்கள், மக்களுக்கு அடிப்படை வசதிகள் கட்டமைப்பு ஆகியன செய்து கொடுக்கப்படும். அதன்படி பல்வேறு புது திட்டங்கள் செயல்படுத்தப்படும்.பருவ காலங்களில் வெள்ள நீரால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு, 65 கோடி ரூபாயில் சாக்கடை வசதி; இஸ்மாயில்கான் ஏரி, 41 கோடி ரூபாயில் அபிவிருத்தி; மாநகராட்சியில் உள்ள பள்ளிகள், 20 கோடி ரூபாய் செலவில் நவீனமயம்; புறம்போக்கு நிலங்கள், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில், 10 கோடி ரூபாய் செலவில் முள்வேலி உள்பட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை