உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மரத்தில் இருந்து விழுந்த மாணவர் உயிரிழப்பு

மரத்தில் இருந்து விழுந்த மாணவர் உயிரிழப்பு

சேலம்: சேலம், சின்ன வீராணம் காட்டுவளவை சேர்ந்தவர் ராமன். இவ-ரது மகன் நவீன், 15. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 17ல் ஆடி பண்டிகைக்கு தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார். அப்போது எதிர்பா-ராத விதமாக தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த மாண-வரை, உறவினர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவ-மனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். வீராணம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ