உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் காயம் அடைந்தவர் 3 மாதத்துக்கு பின் உயிரிழப்பு

விபத்தில் காயம் அடைந்தவர் 3 மாதத்துக்கு பின் உயிரிழப்பு

தலைவாசல், பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே அரும்பாவூரை சேர்ந்தவர் அலெக்சாண்டர், 47. கூலித்தொழிலாளியான இவர், 'ஸ்பிளண்டர்' பைக்கில், கடந்த ஆக., 9 காலை, 7:15 மணிக்கு, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனுார், பொன்னாளியம்மன் கோவில் அருகில் சென்றுகொண்டிருந்தார். அப்போது நாய் குறுக்கே வர, தடுமாறி விழுந்த அவர் படுகாயமடைந்தார். தொடர்ந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்கு, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த அவர், 3 மாதங்களுக்கு பின் இறந்துள்ளார். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ