உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒப்பந்தம் எடுப்பதில் வாக்குவாதம் வரும் 27க்கு ஏலம் ஒத்திவைப்பு

ஒப்பந்தம் எடுப்பதில் வாக்குவாதம் வரும் 27க்கு ஏலம் ஒத்திவைப்பு

ஆத்துார்;சேலம் மாவட்டம் ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள பொருட்கள் பாதுகாப்பு அறை, சைக்கிள் ஸ்டாண்ட், கட்டண கழிப்பிடம், வாரச்சந்தை, தினசரி கடை சுங்கம் உள்பட, 13 வருவாய் இனங்களுக்கு நேற்று ஒப்பந்தம் விடுவதாக, நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. நேற்று, நகராட்சி கமிஷனர் அறையில் பெட்டி வைத்து, ஒப்பந்தம் விடும் பணியில், கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் உள்ளிட்ட அலுவலர்கள் ஈடுபட்டனர்.ஆனால், தி.மு.க., - வி.சி., கவுன்சிலர்கள், அவரது கணவர்கள், ஒப்பந்ததாரர்களிடம் பேச்சு நடத்தினர். இதில் ஒப்பந்ததாரர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. மேலும் ஏலம் எடுப்பது தொடர்பாக, ஒப்பந்ததாரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.உடனே ஆத்துார் டவுன் போலீசார் வந்தனர். பின் போலீஸ் முன்னிலையில் ஏலம் நடந்தது. அப்போது ஒப்பந்ததாரர்கள் பங்கேற்காமல் வெளியே நின்றிருந்தனர்.இதனால் கமிஷனர், 'இன்று(நேற்று) நடக்கவிருந்த ஒப்பந்தம், நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது. வரும், 27ல், ஏலம் விடுப்படும்' என அறிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை