உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எஸ்.ஐ.ஆர்., பணியை கண்காணிக்க அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை

எஸ்.ஐ.ஆர்., பணியை கண்காணிக்க அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை

ஓமலுார், அ.தி.மு.க., சார்பில், ஓமலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பி.எல்.ஏ., - பி.எல்.ஏ., 2 ஆலோசனை கூட்டம், ஓமலுார் அருகே உள்ள, சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.அதில் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது: எஸ்.ஐ.ஆர்., பணியில், தி.மு.க., அரசு குளறுபடி செய்து, இரட்டை வேடம் போடுகிறது. தமிழகம் முழுதும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அரசு அதிகாரிகளை மிரட்டி, அ.தி.மு.க., ஓட்டுகளை திருட முயற்சிக்கின்றனர். அதனால் அதிகாரிகள் வீடுகள் தோறும் செல்லும்போது, நம் கட்சியினர் உடன் சென்று கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, நகர, ஒன்றிய செயலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ