உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாக்காளர் பட்டியல் அப்டேட் தி.மு.க.,வினருக்கு அறிவுரை

வாக்காளர் பட்டியல் அப்டேட் தி.மு.க.,வினருக்கு அறிவுரை

பனமரத்துப்பட்டி, வீரபாண்டி சட்டசபை தொகுதி, தி.மு.க.,வில், சட்டசபை தேர்தல் பணி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு, 17 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஆலோசனை கூட்டம், நெய்க்காரப்பட்டியில் நேற்று நடந்தது. ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம் தலைமையில், எஸ்.ஐ.ஆர்., குறித்து ஆலோசித்தனர்.அப்போது எம்.பி., 'படிவம் வழங்கும் பணி தொடங்கி, 10 நாட்களுக்கு மேலான நிலையில், குறைந்த அளவிலேயே பூர்த்திசெய்து வழங்கியுள்ளனர். படிவத்தை விரைவாக பூர்த்தி செய்து, அலுவலர்களிடம் வழங்கி, வாக்காளர் பட்டியலை, 'அப்டேட்' செய்ய வேண்டும்' என, அறிவுறுத்தினார். இதில் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, சேலம் ஒன்றிய செயலர்கள், பேரூர் செயலர்கள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை