| ADDED : மார் 18, 2024 03:19 AM
வாழப்பாடி: வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நாம் தமிழர் கட்சியின் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி வேட்பாளர் ஜெகதீசபாண்டியன் அறிமுக கூட்டம் நேற்று நடத்த, அக்கட்சியினர் திட்டமிட்டனர்.இதற்கு நேற்று முன்தினம் இரவு முதல் மேடை அமைக்கப்பட்டு, கடலுார் நெடுஞ்சாலையோரம் இருபுறமும் கட்சிக்கொடி, வாழப்பாடி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.ஆனால் நேற்று முன்தினம் மாலை, லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலானதால், தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவித்து, வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, வாழப்பாடி போலீசார், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கூட்டம் நடத்தக்கூடாது என தெரிவித்தனர். இதனால் மேடை, கட்சிக்கொடிகள், போஸ்டர் உள்ளிட்ட முழுதையும், டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் அகற்றினர்.இதற்கு பின் உரிய அனுமதி பெற்று, வாழப்பாடியில் கூட்டம் நடந்தது. அதில் ஜெகதீசப்பாண்டியன் பேசினார். ஏராளமானோர் பங்கேற்றனர்.