உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்

தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்

சேலம்: தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.சேலம், நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் கும்பாபி ேஷக விழா, கடந்த, 19ல் யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து தீர்த்தக்குடங்களை, குமரகவுண்டர் தெரு சக்தி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம், ஈஸ்வரி தேவிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 108 மூலிகை திரவிய ேஹாமம், கோபுர கலசம் நிர்மானித்தல் நடந்தன. மாலையில், 3ம் கால யாக பூஜை, இரவில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தன.நேற்று அதிகாலை, 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து கலச புறப்பாடு, விமான கலசங்கள், விநாயகர், சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை, பிரம்ம துர்க்கை, காளியம்மனுக்கு கும்பாபி ேஷகம் கோலாகலமாக நடந்தது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இரவில் அம்மன் திருவீதி உலா, மேள தாளம் முழங்க நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை