உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 10, பிளஸ் 2 பொதுத்தேர்வை கண்காணிக்க மாவட்ட வாரியாக அலுவலர்கள் நியமனம்

10, பிளஸ் 2 பொதுத்தேர்வை கண்காணிக்க மாவட்ட வாரியாக அலுவலர்கள் நியமனம்

சேலம்: பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க, மாவட்டம் வாரியாக உயர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான விடைத்தாள் அனுப்பும் பணி, வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைப்பது, தேர்வு மையங்கள் அமைப்பது, அவற்றில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.தேர்வு பணிகளை கண்காணிக்க, பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர் மற்றும் இயக்குனர் அந்தஸ்தில் உள்ள உயர் அலுவலர்கள், மாவட்டம் வாரியாக கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வித்துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார்.இதன்படி சேலம் மாவட்டத்துக்கு, தமிழ்நாடு பாடநுால் கழக செயலர் குப்புசாமி, நாமக்கல் மாவட்டத்துக்கு பணியாளர் தொகுதி இணை இயக்குனர் ராஜேந்திரன், தர்மபுரி மாவட்டத்துக்கு தொழிற்கல்வி இணை இயக்குனர் ராமகிருஷ்ணன், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு தொடக்கக்கல்வி இணை இயக்குனர் சுகன்யா, ஈரோடு மாவட்டத்துக்கு தமிழ்நாடு பாடநுால் கழக மேலாண்மை இயக்குனர் கெஜலட்சுமி, கரூர் மாவட்டத்துக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குனர் சரசுவதி ஆகியோர் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.பள்ளிக்கல்வித்துறை கண்காணிப்பு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், திருச்சியில் இன்று, கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தலைமையில் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்