உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தோட்டக்கலையில் அரசு பணி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தோட்டக்கலையில் அரசு பணி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, ஜாரி கொண்டலாம்பட்டி அரசுப்பள்ளியில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேளாண்மை, தோட்டக்கலை மேற்படிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பனமரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் குமரவேல், வேளாண், தோட்டக்கலை மேற்படிப்புகள், தனியார் மற்றும் அரசுப்பணி வேலை வாய்ப்புகள், எதிர்கால உணவு தேவை, ஏற்றுமதி தொழில் வாய்ப்புகள், காய்கறி, பழங்கள், மலர்கள் உற்பத்தி, ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் நடேசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை