உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் சார்பில் ரத்த சுத்திகரிப்பு தொழில்நுட்பவியலாளர் வார விழா

விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் சார்பில் ரத்த சுத்திகரிப்பு தொழில்நுட்பவியலாளர் வார விழா

சேலம், ரத்த சுத்திகரிப்பு பிரிவு தொழில்நுட்பவியலாளர்களின் மருத்துவ பங்களிப்பை அங்கீகரிக்கும்படி, அக்டோபரில், அதன் வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது.அதன்படி சேலம் விநாயகா மிஷனின், 'விம்ஸ்' வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி ரத்த சுத்திகரிப்பு தொழில்நுட்ப பிரிவு மூலம், இந்த வார விழா, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி கொண்டாடப்பட்டது.டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.விம்ஸ் மருத்துவமனை, சிறுநீரக மருத்துவ ஆலோசகர் செந்தில்நாதன், சிறுநீரக மாற்று சிகிச்சை செயல்பாடு, கையாளும் வழிமுறை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.சிறுநீரக ஆரோக்கியம் குறித்த மாதிரி வடிவமைப்பு சார்ந்த போட்டிகள் நடத்தி, மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விம்ஸ் மருத்துவமனையின் ரத்த சுத்திகரிப்பு பிரிவு பொறுப்பாளர் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டை, கல்லுாரி ரத்த சுத்திகரிப்பு பிரிவு பொறுப்பாளர் மெர்பியா, உதவி பேராசிரியர்கள் குபேரன், ஷியாம் சுந்தர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை