உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கார் டயர் வெடித்து விபத்து; மருத்துவ மாணவர் பலி

கார் டயர் வெடித்து விபத்து; மருத்துவ மாணவர் பலி

சங்ககிரி : சங்ககிரி, பயணியர் விடுதி சாலையை சேர்ந்தவர் சரவணகுமார். சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக உள்ளார். இவரது மகன் கீர்த்திகுமார், 22. கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில், 4ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். அவர்,விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்தார்.இந்நிலையில் நேற்று, 'சிட்டி' காரில், வைகுந்தத்தில் இருந்து சங்ககிரி நோக்கி சென்றார். மதியம், 2:15 மணிக்கு சங்ககிரி அருகே ஆவரங்கம்பாளையத்தில், சேலம்- -- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, காரின் பின்புற டயர் வெடித்தது. இதில் சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி பின்புறம், கார் வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த, கீர்த்திகுமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை