உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அனுமதியின்றி பேனர் த.வெ.க.,வினர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் த.வெ.க.,வினர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர்த.வெ.க.,வினர் மீது வழக்குசேலம், நவ. 3-விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த, 27ல், த.வெ.க., மாநாடு நடந்தது. அதையொட்டி சேலம், அம்மாபேட்டை, வித்யா நகரை சேர்ந்த ஜவகர், 34, பட்டைக்கோவில் அருகே, விஜய் படத்துடன் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும்படி பேனர் வைத்திருந்தார். அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டது குறித்து, வி.ஏ.ஓ., முத்துலட்சுமி புகார்படி, டவுன் போலீசார், நேற்று முன்தினம் ஜவகர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் திருவாக்கவுண்டனுார் பகுதி கட்சி செயலர் கமல் மீது, அங்குள்ள மேம்பாலத்தில் பேனர் வைத்தது தொடர்பாக, சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ