உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நா.த.க.,வினர் 13 பேர் மீது வழக்கு

நா.த.க.,வினர் 13 பேர் மீது வழக்கு

ஏற்காடு: ஏற்காடு மலைப்பாதை, 8வது கொண்டை ஊசி வளைவில், ஈ.வெ.ரா., வளைவு என்ற பெயர் மீது, 'தகடூர் அதியமான் வளைவு' என, நாம் தமிழர் கட்சியினர் பிளக்ஸ் ஒட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஏற்காடு திராவிடர் விடுதலை கழகத்தினர், நேற்று முன்தினம் ஏற்காடு போலீசார், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். நேற்று அந்த இடத்தில், தி.க.,வினர், போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், 8வது கொண்டை ஊசி வளைவில், போலீசார் நேற்று முழுதும் பாது-காப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நெடுஞ்சாலை துறை-யினர், நா.த.க.,வினர் மீது ஏற்காடு போலீசில் புகார் கொடுத்தனர்.இதனால், 13 பேர் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை