உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலை விரிவாக்க பணியின்போது வாக்கு-வாதம் மூதாட்டியை தாக்கிய முன்னாள் எம்.பி., மீது வழக்கு

சாலை விரிவாக்க பணியின்போது வாக்கு-வாதம் மூதாட்டியை தாக்கிய முன்னாள் எம்.பி., மீது வழக்கு

ஓமலுார்: சாலை பணி தொடர்பாக ஏற்பட்ட வாக்குவா-தத்தில், முன்னாள் எம்.பி., அர்ஜூனன், மூதாட்-டியை தாக்கிய வீடியோ பரவி வருகிறது.மேச்சேரி அருகே அரங்கனுாரை சேர்ந்தவர் சரோஜா, 65. இவரது வீடு அருகே, நேற்று முன்-தினம் சாலை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. அப்பணியில் ஈடுபட்ட ஒப்-பந்ததாரரிடம், 'வீடு அருகே சாலை அமைத்தால் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்-ளது. சற்று தள்ளி சாலை போடுங்கள்' என, மக்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து ஒப்பந்ததாரர், தி.மு.க.,வின் முன்னாள் எம்.பி.,யும் அ.தி.மு.க.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., வுமான அர்ஜூனனிடம் தெரிவித்தார். உடனே அங்கு வந்த அர்ஜூனன், சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் சரோஜா என்ற மூதாட்டி கன்னத்தில், 'பளார், பளார்' என அறைந்துள்ளார். இதில் மூதாட்டி மயங்கி விழுந்தார்.தொடர்ந்து அர்ஜூ னன், சாலையில் இருந்த கட்டையை எடுத்து மக்களை தாக்க முயன்ற-போது, அங்கிருந்த சிலர் தடுத்து, காரில் அழைத்துச்சென்றனர். இச்சம்பவ வீடியோ தற்-போது பரவி வருகிறது. காயம் அடைந்த சரோஜா, ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நேற்று மதியம், மேச்சேரி போலீசார் சரோஜா-விடம் விசாரித்து, வாக்குமூலம் பதிவு செய்தனர். தொடர்ந்து பெண்ணை தாக்கியது உள்பட, 4 பிரிவுகளில், அர்ஜூனன் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை