காவிரி நீர் மாசு சோதனையில் திடுக்
சேலம்: மேட்டூர் சிட்கோவில் இயங்கும், 80 தொழிற்சாலைகளில், மெக்-னீசியம் சல்பேட் தயாரிக்கும், 36 ஆலைகளில், பெரும்பாலா-னவை வீதிமீறி செயல்படுவதாக புகார் எழுந்தது. குறிப்பாக ஆலைகளில் இருந்து வெளியேறும் உற்பத்தி எச்சமான, கால்-சியம் செறிவு மிகுந்த மண்ணை, மறுசுழற்சிக்கு பயன்படுத்தாமல் அப்படியே மேட்டூர் காவிரி ஆற்றில் திருப்பி விடப்பட்டு, நீரை மாசடைய செய்வதாக தகவல் வெளியானது.இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்-டத்தில், விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதன் எதி-ரொலியாக, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நித்யலட்சுமி தலைமையில், பறக்கும் படை சுற்றுச்சூழல் பொறியாளர் அடங்-கிய குழுவினர், நேற்று, 3ம் நாளாக, தொடர் சோதனையில் ஈடு-பட்டனர்.அதில் பல்வேறு ஆலைகளில் முறைகேடு, தவறுகள் கண்டுபிடிக்-கப்பட்டுள்ளன. இதுதொடர்பான அறிக்கை, தமிழ்நாடு மாசு கட்-டுப்பாடு வாரிய தலைமையகத்துக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.