உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு தலைமை மருத்துவமனையில் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு

அரசு தலைமை மருத்துவமனையில் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு

மேட்டூர், மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், நேற்று மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.சேலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மேட்டூரில் உள்ளது. இதில், ஆண், பெண் உள் நோயாளிகளுக்காக தலா, 48 படுக்கைகளுடன் கூடிய வார்டுகள், 60 படுக்கை கொண்ட பிரசவ வார்டு, குழந்தைகள் வார்டு, அவசர சிகிச்சை பிரிவு என மொத்தம், 325 படுக்கைகள் உள்ளன. மருத்துவமனைக்கு தினமும், 800க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்நிலையில் நேற்று, மத்திய சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ குழுவை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மேட்டூர் அரசு மருத்துவமனையில், 17வது பொது ஆய்வு பணி மேற்கொண்டனர். அவர்கள் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, ஆண், பெண் நோயாளிகள் வார்டு என அனைத்து வார்டுகளுக்கும், 5க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்து அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு நிவர்த்தி செய்தனர்.ஆய்வின் போது, சேலம் மாவட்ட சுகாதார பணிகள் (ஊரக நலன்) துணை இயக்குனர் நந்தினி, மேட்டூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இளவரசி மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ