சேலம்: தொழில் துறையில் சேலம் முன்னோடி மாவட்டமாக வளர, முத-லீட்டாளர்களுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல் ஆலோசனை கூட்டம் மண்டல அளவில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.அதில் கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:சேலம் மாவட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட, 124 நிறுவனங்களில், 80 தொடங்கப்பட்டு, 1,039.40 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்து, 2,057 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்-ளன.இயந்திர தளவாடங்களை கொள்முதல் செய்து, 26 நிறுவனங்கள், 347.6 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்து விரைவில் பயன்-பாட்டுக்கு வர உள்ளன. 6 நிறுவனங்கள், 47.9 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமான பணிகளை தொடங்க உள்ளன. மேலும், 8 நிறுவனத்தினர், நிலம் தேர்வு செய்து, 113.13 கோடி ரூபாய் முத-லீட்டில் ஆயத்தப்பணிகளை மேற்கொண்டுள்ளனர். 4 நிறுவ-னங்கள், 90.88 கோடி ரூபாய் மதிப்பில் நிலம் வாங்க உத்தேசித்-துள்ளன.தொழில் நிறுவனம் தொடங்கி நடத்த தேவையான ஒப்புதல் உள்-ளிட்டவற்றை எளிதாக பெற ஒற்றை சாளர இணையதளம் வடிவ-மைக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்த விண்ணப்பங்கள் பரிசீ-லிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்படும்.மாவட்டத்தில் திறன் வாய்ந்த படித்த இளைஞர்கள் அதிகளவில் உள்ளதோடு, தொழில் தொடங்க அனைத்து உட்கட்டமைப்பு வச-திகள் உள்ளதால் முதலீட்டாளர்கள் தயக்கமின்றி தொழில் தொடங்கி அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, தொழில் துறையில் சேலம் முன்னோடி மாவட்டமாக வளர முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை(ஊரக தொழில்) கூடுதல் இயக்குனர் ரேஷ்மா(பொ), மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.