உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புகார்தாரர் அலைக்கழிப்பு: 10 நாளுக்கு பின் வழக்கு

புகார்தாரர் அலைக்கழிப்பு: 10 நாளுக்கு பின் வழக்கு

ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா கே.மோரூரை சேர்ந்தவர் பழனிசாமி, 46. லாரி டிரைவர். இவரது மனைவி சுமதி, 32. இவருக்கு, 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சொந்த ஊரான தலைவா-சலில் இருந்து, 5 ஆண்டுக்கு முன் கே.மோரூர் வந்தனர். அவர்கள் குடியிருப்பு அருகே உள்ள தெருவை சேர்ந்த சிலர், சுமதியிடம் அத்துமீறி நடந்துகொண்டனர். இதனால் அவர், கடந்த, 14ல் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்க சென்றார். அப்போது மகளிர் ஸ்டேஷனுக்கு செல்லும்படி போலீசார் தெரிவித்தனர்.அங்கு சென்ற சுமதியை, தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்க கூறி திருப்பி அனுப்பினர். இதை அறிந்த கிராம மக்கள், போலீசாரிடம் புகார் வாங்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த, 23ல், கணவர், குழந்தைகளுடன் தீவட்டிப்பட்டி ஸ்டேஷனில் சுமதி தஞ்சம் அடைந்தார். பின் விசாரித்த போலீசார் நேற்று, பெண்ணுக்கு தொல்லை தந்ததாக கே.மோரூரை சேர்ந்த கோவிந்தராஜ், 28, சேகர், 27, மீது வழக்குப்-பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ