உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆம்புலன்ஸில் சென்ற செவிலியை பாதியில் இறக்கிவிடப்பட்டதால் சர்ச்சை

ஆம்புலன்ஸில் சென்ற செவிலியை பாதியில் இறக்கிவிடப்பட்டதால் சர்ச்சை

ஆத்துார் : ஆத்துாரில் இருந்து ஆம்புலன்ஸில், பிரசவித்த தாய்மாருடன் சென்ற செவிலியை, பாதி வழியில் இறக்கி விடப்பட்டது சர்ச்சையை ஏற்ப-டுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் ஆத்துார் அரசு மருத்துவம-னையில், பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்த பின் ரத்தப்-போக்கு அதிகரித்தது. இதனால் சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, '108' அவசரகால ஆம்புலன்ஸில் அனுப்பினர். அவ-ருக்கு உதவியாக, ஆத்துார் அரசு மருத்துவ-மனை செவிலியை திவ்யா சென்றார். அங்கு மருத்துவரிடம் ஒப்படைத்துவிட்டு, செவிலியை மீண்டும் ஆத்துார் செல்ல, அதே ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கேட்டுள்ளார்.அவர், 'எங்களுக்கு அனுமதி கிடையாது. ஆம்-புலன்ஸ் மல்லியக்கரை செல்வதால், பெத்தநா-யக்கன்பாளையத்தில் இறக்கிவிடுகிறோம்' என கூறி, அங்குள்ள ஸ்டாப்பில் இறக்கிவிட்டு ஆம்-புலன்ஸ் சென்றது. செவிலியை, அவசரத்தில் வந்ததால், பணமும் எடுத்துவரவில்லை.இந்நிலையில் அவரது கணவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, நடந்த விபரத்தை செவிலியை தெரிவித்தார். பின் கணவர் வந்து, பைக்கில் ஆத்துாருக்கு அழைத்துச்சென்றார். ஆனால் அரசு மருத்துவமனை செவிலியரை, ஆம்புலன்ஸில் இருந்து பாதி வழியில் இறக்கி-விட்ட சம்பவம் தொடர்பான வீடியோ பரவி-யதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து திவ்யா கூறுகையில், ''ஆத்துாரில் இறக்கிவிட பலமுறை கேட்டும் பெத்தநாயக்கன்-பாளையத்தில் தான் இறக்கிவிடுவோம் என்-றனர். பணமும் எடுத்துச்செல்லாததால் பாதி வழியில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது,'' என்றார்.இதுகுறித்து, சேலம் சுகாதார பணி இணை இயக்குனர் நந்தினி கூறியதாவது: நோயாளிக-ளுடன் அவசர நேரத்தில் ஆம்புலன்ஸில் செவி-லியர் செல்லும்போது, மீண்டும் அவர்களை அதே இடத்தில் இறக்கி விட வேண்டும். செவி-லியை, பெத்தநாயக்கன்பாளையத்தில் இறக்கி-விடப்பட்டது குறித்து டிரைவரிடம் கேட்டபோது, 'மற்றொரு அழைப்பு வந்ததால், ஆம்புலன்ஸ் செல்ல வேண்டியதாயிற்று' என, பதில் அளித்தார். இருப்பினும் விசாரணை நடக்கிறது. அதேநேரம் இதுபோன்ற செயல் இனிமேல் நடக்-காமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை